செய்திகள்

ரெயிலில் விற்கப்படும் உணவில் எடை, தேதி உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற வேண்டும்: ரெயில்வே மந்திரி உத்தரவு

ரெயிலில் விற்கப்படும் உணவு பாக்கெட்டுகளில், ஒப்பந்ததாரர் விவரம், உணவின் எடை, தேதி, சைவம் அல்லது அசைவம் உள்ளிட்ட விவரங்கள் அதில் குறிப்பிட வேண்டும் என்று ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் கூறியுள்ளார்

ரெயிலில் விற்கப்படும் உணவுகள் தரம் குறைந்து இருப்பதாக பல்வேறு தரப்பில் குற்றச்சாட்டு வந்தது. இதையடுத்து ரெயில்வே அமைச்சகம் கடந்த 5-ந் தேதி அனுப்பிய சுற்றறிக்கையில், ரெயில் உணவுகள் தரம் மற்றும் சுகாதாரத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது. இதற்கு முன்பு ரெயில் உணவு பாக்கெட்டுகளில் சைவம் அல்லது அசைவம் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில் ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் நேற்று முன்தினம் அனைத்து மண்டல பொது மேலாளர்களுக்கும் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், ரெயிலில் விற்கப்படும் உணவு பாக்கெட்டுகளில், உணவை வினியோகிக்கும் ஒப்பந்ததாரர் விவரம், உணவின் எடை, தேதி, சைவம் அல்லது அசைவம் உள்ளிட்ட விவரங்கள் அதில் குறிப்பிட வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

SCROLL FOR NEXT