செய்திகள்

உணவுத்துறை மந்திரி பஸ்வானுக்கு உடல்நலக் குறைவு: பொறுப்புகள் வேளாண் மந்திரியிடம் ஒப்படைப்பு

மத்திய உணவுத்துறை மந்திரி ராம் விலாஸ் பஸ்வானுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பதால், அவரது இலாகாக்கள் வேளாண் மந்திரி ராதா மோகன் சிங்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை மந்திரி ராம் விலாஸ் பஸ்வானுக்கு (வயது 70) உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதயம் சம்பந்தமான நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் லண்டன் சென்றுள்ளார். அவர் சிகிச்சை முடிந்து வர சில காலம் ஆகும் என்பதால், அவரது இலாகாக்கள் வேளாண் மந்திரி ராதா மோகன் சிங்கிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளன.