வடமாநிலங்களில் கடந்த சில தினங்களாக கடும் பனிப்பொழிவு ஏற்படுகிறது.
தாங்க முடியாத அளவுக்கு குளிர்ந்த காற்றும் வீசுவதால் வட மாநில மக்களின் இயல்பு வாழ்க்கையில் தினம், தினம் பாதிப்பு ஏற்பட்டபடி உள்ளது. குறிப்பாக ரெயில், விமான சேவைகளில் முடக்கம் ஏற்படுகிறது.
வடமாநிலங்களில் இன்று அதிகாலை குறைந்தபட்ச தட்பவெப்பநிலை 7 டிகிரி செல்சியசாக இருந்தது. தலைநகர் டெல்லியில் பனி புகை மூட்டம் மிக அதிகமாக இருந்தது. எங்கு பார்த்தாலும் வெள்ளை புகை மூடி இருந்தது.
5 மீட்டர் தொலைவில் இருப்பவர்களை கூட தெளிவாக பார்க்க முடியாதபடி பஞ்சு போன்று பனி மூடியிருந்தது. இதனால் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமானங்களை இயக்க முடியவில்லை. இதனால் இன்று காலை 20 விமான சேவை ரத்து செய்யப்பட்டது.
50-க்கும் மேற்பட்ட விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.
ரெயில் சேவையிலும் இன்று பாதிப்பு ஏற்பட்டது. கடும் பனி மூட்டம் காரணமாக 12 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. 13 ரெயில்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டன.