செய்திகள்

லாலுவுக்கு எதிரான மேலும் ஒரு கால்நடை தீவன ஊழல் வழக்கில் திங்கட்கிழமை தீர்ப்பு

பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவுக்கு எதிரான தும்கா கருவூலம் தொடர்பான கால்நடை தீவன ஊழல் வழக்கில் ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் வரும் திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கவுள்ளது.

மாலை மலர்

ராஞ்சி:

பீகார் மாநிலத்தில் நடைபெற்ற சுமார் 900 கோடி ரூபாய் மதிப்பிலான கால்நடை தீவன ஊழல் தொடர்பாக முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ் மற்றும் மேலும் சிலருக்கு எதிராக பாக மொத்தம் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.  

அதில், தும்கா மாவட்ட அரசு கருவூலத்தில் இருந்து ரூ.3.76 கோடி பணம் எடுத்த வழக்கு எண் RC 38/96 தொடர்பாக சிறையில் இருந்தவாறு வீடியோ கான்பரன்சிங் வழியாக சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி சிவபால் சிங் விசாரணை நடத்தினார்.

இதற்கிடையே, இந்த வழக்கு தொடர்பாக இன்று தீர்ப்பு அளிப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், மாநிலம் முழுவதும் உள்ள 42 நீதிபதிகள் இரண்டு நாள் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டி இருப்பதால், இந்த வழக்கின் தீர்ப்பு வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்பட உள்ளது என நீதிபதி சிவபால் சிங் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் மொத்தமுள்ள 31 குற்றவாளிகளில் முன்னாள் முதல் மந்திரி ஜெகன்னாத் மிஸ்ரா, முன்னாள் எம்.பி ஆர்.கே.ரானா, முன்னாள் மந்திரி வித்யாசாகர் உள்பட பலரும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews