நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 
செய்திகள்

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பட்ஜெட் - நிர்மலா சீதாராமன்

2020-21-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதாக இருக்கும் என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

புதுடெல்லி:

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் 2020 -21ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

இந்திய பொருளாதாரத்துக்கான அடித்தளம் வலுவாகவே உள்ளது. அடிப்படை கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த கவனம் செலுத்தப்பட்டு உள்ளது.

வருவாய் மற்றும் வாங்கும் சக்தியை அதிகரிக்கும் வகையில் பட்ஜெட் உருவாக்கப்பட்டு உள்ளது. அனைத்து துறையினரின் விருப்பங்கள், நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது. 

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் இந்த பட்ஜெட் இருக்கும். இந்த பட்ஜெட்டால் மக்களின் வருமானம் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.