செய்திகள்

திருச்சியில் பூக்களின் விலை கிடு கிடு உயர்வு

திருச்சியில் நேற்று வரை குறைவாக இருந்த பூக்களின் விலை இன்று கிடு கிடு வென உயர்ந்தது. நாளை முகூர்த்த தினம் என்பதால் பூக்களின் விலை இவ்வாறு உயர்ந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாலை மலர்

திருச்சி:

திருச்சியில் நேற்று வரை குறைவாக இருந்த பூக்களின் விலை இன்று கிடு கிடு வென உயர்ந்தது. நாளை முகூர்த்த தினம் என்பதால் பூக்களின் விலை இவ்வாறு உயர்ந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சில வாரங்களாக ஒரே விலையில் இருந்த பூக்கள் தற்போது உச்சத்தை தொட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வண்ண வண்ண ரோஜா பூக்கள், இதர பூக்கள் கர்நாடகம் மற்றும் வேறு மாநிலங்களில் இருந்து விற்பனைக்காக திருச்சியில் இறக்குமதி செய்யப்படுகிறது. மேலும் பல மாவட்டங்களில் இருந்தும், உள்ளூர் பூக்களும் திருச்சி காந்தி மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வருகின்றன. விற்பனை சீசன் நேரங்களில் அதிக லாரிகளில் பூக்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. இருப்பினும் இன்று ரூ.10 முதல் ரூ.200 வரை உயர்ந்து பூக்கள் விற்பனை செய்யப்பட்டது.

பொதுவாக வைகாசி மாதத்தில் இருந்து முகூர்த்த தினங்கள் அதிகம் வரும் என்பதால் பூக்களின் விலை விரைவாக உயர்ந்து விடும். ஆனால் தற்போது வைகாசி மாத தொடக்கத்திலேயே பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.திருச்சி காந்தி மார்க்கெட்டில் விற்கப்படும் பூக்களின் விலை நிலவரம் கீழே வருமாறு:-

மல்லிகைப்பூ ரூ.60ல் இருந்து ரூ.140 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் அரளிபூ ரூ.150லிருந்து 200க்கும், சம்மங்கிப்பூ ரூ.100லிருந்து 200க்கும், கனகாமரம் ரூ.250லிருந்து 400க்கும், பிச்சிபூ ரூ.130லிருந்து 200க்கும், கொளுந்து 30லிருந்து 40க்கும், மருவு 15லிருந்து 20க்கும், கலர் ரோஸ் பூக்கள் ரூ.130லிருந்து 200க்கும், கேந்தி ரூ.25லிருந்து 30க்கும், மஞ்சள் செவ்வந்தி ரூ.100லிருந்து 200க்கும், வெள்ளை செவ்வந்தி ரூ.120 லிருந்து 240க்கும் விற்பனை செய்யப்படுகிறது.