திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே வெள்ளோடு, வடமதுரை, அய்யலூர், சிலுவத்தூர், புகையிலைப்பட்டி, செம்பட்டி மற்றும் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் காய்கறி பயிருக்கு அடுத்தபடியாக பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
இந்த பூக்கள் அனைத்தும் திண்டுக்கல் பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது. தற்போது நிலவி வரும் வறட்சி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட அனைத்தையும் பொறுமையாக ஏற்று சாகுபடி செய்தாலும் பூக்கள் விலை கட்டுப்படியான நிலையில் உள்ளது. விவசாயிகள் வாழ்க்கையில் இடி விழுந்தது போல் பூக்கள் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. பொதுவாக பூக்கள் வரத்து குறைவாக இருந்தால் விலை உயரும். ஆனால் தற்போது அப்படி இல்லை. இன்றும் பூக்கள் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது.
பூக்களின் விலை கிலோவில் வருமாறு:-
மல்லிகை ரூ.140, சம்பங்கி 120, அரளி ரூ.250, ரோஜா ரூ.120, முல்லை பூ 200.
இது குறித்து என்.பஞ்சம்பட்டியை சேர்ந்த விவசாயி பிரகாசம் கூறுகையில் கடும் வறட்சியால் தண்ணீரை விலைக்கு வாங்கி பூஞ் செடிகளை காப்பாற்றி வருகிறோம். ஆனால் மார்க்கெட்டில் பூக்களுக்குரிய விலைதான் கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் வாழ்க்கையே கேள்விக்குறியாக உள்ளது.
மார்க்கெட்டில் 140 கடைகள் உள்ளது. வரத்து குறைவால் 70 கடைகள் மட்டும் முழுமையாக இயங்குகிறது. திருவிழா, திருமண விசேஷங்கள், பண்டிகை நாட்கள் இல்லாததால் பூக்கள் விலை குறைந்து உள்ளது என்றார்.