கான்கிரீட் கலவை எந்திரம் வைக்கப்பட்ட மிதவை கடலில் மூழ்கி கிடப்பது அம்புக் குறியிட்டு காட்டப்பட்டுள்ளது. 
செய்திகள்

கடல் சீற்றத்தால் பாம்பனில் மிதவை மூழ்கியது

பாம்பனில் கடல் சீற்றம் மற்றும் நீரோட்ட வேகத்தால் கான்கிரீட் கலவை எந்திரம் வைக்கப்பட்ட மிதவை கடலில் மூழ்கியது.

ராமேசுவரம்:

மண்டபத்தில் இருந்து ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரெயில் பாலம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்த பாலம் மிகவும் பழமையான பாலமாகி விட்டதால் அந்த பாலத்தின் அருகிலேயே சுமார் ரூ.250 கோடியில் புதிதாக ரெயில் பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதற்காக கடலுக்குள் 4 மிதவைகள் நிறுத்தப்பட்டு, அந்த மிதவையில் துளைபோடும் எந்திரம் நிறுவப்பட்டு அதன்மூலம் தூண்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் பாம்பன் வடக்கு கடல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் கடல் சீற்றம் மற்றும் நீரோட்ட வேகம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் புதிய ரெயில் பாலம் பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கான்கிரீட் கலவை எந்திர மிதவை ஒன்று நேற்று கடலில் மூழ்கியது. இதனை மீட்கும் பணி மும்முரமாக நடந்தது.

SCROLL FOR NEXT