புதுடெல்லி:
இந்தியாவின் பிரபல ஆன்லைன் வர்த்தக தளமான பிளிப்கார்ட்டில் பிக் 10 சேல் நடைபெற்று வருகிறது. மே 14-ந்தேதி துவங்கிய சிறப்பு விற்பனை 18-ந்தேதி வரை நடைபெறுகிறது. சிறப்பு விற்பனையில் பிளிப்கார்ட் தனது பொருட்களுக்கு சிறப்பு விலை, தள்ளுபடி மற்றும் இதர சலுகைகளை அறிவித்து வழங்கி வருகிறது.
பிளிப்கார்ட் பிக் 10 விற்பனையில் மின்னணு சாதனங்கள், ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச் உள்ளிட்டவற்றிற்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. வெவ்வேறு விலை பட்டியலில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி மற்றும் எக்சேஞ்ச் சலுகைகள் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் பிளிப்கார்ட் பிக் 10 விற்பனையில் கிடைக்கும் சிறப்பு சலுகைகளை தொடர்ந்து பார்ப்போம்..,
ஸ்மார்ட்போன்களுக்கு முதன்மை சலுகைகள்:
பிளிப்கார்ட் பிக் 10 விற்பனையின் கீழ் வழங்கப்படும் முதன்மை சலுகைகளின் படி, லெனோவோ கே5 நோட் 64 ஜிபி மாடல் ரூ.2000 வரை தள்ளுபடி செய்யப்பட்டு தற்சமயம் ரூ.11,499 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. இதே போல் லெனோவோ கே 6 பவர் விலை ரூ.9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் பழைய மாடல்களை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.2000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
மோட்டோ ஜி5 பிளஸ் ஸ்மார்ட்போன் எக்சேஞ்ச் சலுகையின் கீழ் ரூ.14,999க்கு வழங்கப்படுகின்றது. சாம்சங் கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட் முந்தைய விலையில் இருந்து ரூ.3000 தள்ளுபடி செய்யப்பட்டு தற்சமயம் ரூ.14,900 விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. கூகுள் பிக்சல் மற்றும் பிக்சல் எக்செல் போன்கள் எக்சேஞ்ச் சலுகையின் கீழ் விலை ரூ.34,999 முதல் துவங்குகின்றது. இதே போல் மோட்டோ எம் ரூ.2000 குறைக்கப்பட்டு ரூ.13,999 விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.
பட்ஜெட் போன்களுக்கு கிடைக்கும் சலுகைகள்:
மோட்டோ இ3 பவர் போன்களுக்கு ரூ.1000 விலை குறைக்கப்பட்டு ரூ.6,999க்கு விற்பனை செய்யப்படுகின்றது. சாம்சங் ஆன் 7 ரூ.1000 குறைக்கப்பட்டு ரூ.7,990 விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. லெனோவோ கே5 பிளஸ் மாடல் ரூ.1000 குறைக்கப்பட்டு ரூ.7,499 விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. ஸ்வைப் எலைட் சென்ஸ் மாடல் ரூ.2000 குறைக்கப்பட்டு ரூ.5,999 விலைக்கும் ஸ்வைப் எலைட் 3 ரூ.1000 குறைக்கப்பட்டு ரூ.4,999 விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.
பிரீமியம் போன்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள்:
ஆப்பிள் ஐபோன் SE 32 ஜிபி மாடல் ரூ.5,201 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.21,999 விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதே போல் ஐபோன் 6 விலையில் ரூ.7000 தள்ளுபடி செய்யப்பட்டு தற்சமயம் ரூ.29,990க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஆப்பிள் மட்டுமின்றி சாம்சங் மற்றும் இதர நிறுவனங்களும் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
சாம்சங் கேலக்ஸி சி9 ப்ரோ எக்சேஞ்ச் சலுகையின் கீழ் ரூ.20,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகின்றது. சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ1 ரூ.2,000 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.18,990க்கு விற்பனை செய்யப்படுகின்றது. மோட்டோ எக்ஸ் ஸ்டைல் முந்தைய விலையில் இருந்து ரூ.3000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.23,999 விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. ஹானர் 6 பிளஸ் ஸ்மார்ட்போனிற்கு 5000 ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.21,499 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
ஸ்மார்ட்போன் மட்டுமின்றி டேப்லெட், ஸ்மார்ட்வாட்ச் மற்றும் ஸ்மார்ட்போன் அக்சஸரீகளுக்கும் தள்ளுபடி விலையில் வழங்கப்படுகின்றன.
குறிப்பு:
இங்கு வழங்கப்பட்டுள்ள விலை பட்டியல் பிக் 10 சேல் சலுகையின் கீழ் பிளிப்கார்ட் அறிவித்திருந்தவை ஆகும். இந்த விலை பட்டியல் பிளிப்கார்ட் தரப்பில் எந்நேரத்திலும் மாற்றப்படலாம்.