செய்திகள்

கனடாவில் சோகம் - வீடு தீப்பற்றி எரிந்து தாய், குழந்தைகள் உள்பட 5 பேர் பலி

கனடா நாட்டின் ஒண்டாரியோ நகரில் உள்ள வீட்டில் தீப்பற்றி எரிந்த விபத்தில் தாய், குழந்தைகள் உள்பட 5 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். #CanadaFire

ஒட்டாவா:

கனடா நாட்டின் ஒண்டாரியோ நகரில் உள்ள வீடு ஒன்றில் நேற்று திடீரென தீபிடித்தது. தீ மளமளவென பற்றி எரிந்தது. இந்த விபத்தில் தாயும், நான்கு குழந்தைகளும் சிக்கி உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.

தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற மீட்புப் படையினர் தீயை போராடி அணைத்தனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #CanadaFire