செய்திகள்

டிராக்டர்-லாரி மோதி பயங்கர விபத்து - 5 பேர் பலி

உத்தரப்பிரதேசம் மாநிலம் அம்ரோகா மாவட்டத்தில் டிராக்டர் மற்றும் லாரி மோது பயங்கர விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர். 70 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாலை மலர்

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் மொரதாபாத் மாவட்டம் தேவபூர் கிராமத்தைச் சேர்ந்த 80 பேர் மாகாளய அமாவாசையை ஒட்டி கங்கையில் நீராடுவதற்காக அம்கோரா மாவட்டத்திற்கு நேற்று இரவு டிராக்டர்-டிராலியில் சென்றுள்ளனர். டிராக்டர் அம்கோரா மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது பதன்பூர் கிராமத்திற்கு அருகில் எதிரே வந்த லாரி மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.

இந்த பயங்கர விபத்தில் 4 பெண்கள் உட்பட 5 பேர் பரிதாபமாக பலியாகினர். படுகாயமடைந்த 70 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களில் அதிகமானோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் என கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.