கோப்புப்படம் 
செய்திகள்

கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து 5 பேர் உயிரிழப்பு

பீகாரில் உள்ள கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாட்னா:

பீகார் மாநிலம் பாட்னா அருகே பட்டுஹா பகுதியில் உள்ள கங்கை ஆற்றில் ஒரு படகு சுமார் 15 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. ஆற்றின் ஆழமான பகுதியில் சென்றபோது படகு திடீரென கவிழ்ந்தது. இதனால் பயணிகள் தண்ணீருக்குள் விழுந்து தத்தளித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் விரைந்து சென்று ஆற்றில்  தத்தளித்த பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதில், 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. உயிரிழப்பு மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. #tamilnews