செய்திகள்

தமிழகத்தை இன்னும் 15 ஆண்டுகளுக்கு தி.மு.க.- அ.தி.மு.க. தான் ஆள வேண்டும்: தமிமூன் அன்சாரி

திராவிட கட்சிகள் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் சூழ்நிலையின் அவசியம் கருதி இன்னும் 15 ஆண்டுகளுக்கு அ.தி.மு.க.- தி.மு.க. கட்சிகள் தான் தமிழகத்தை ஆள வேண்டும் என தமிமூன் அன்சாரி கூறினார்.

மாலை மலர்

பேராவூரணி:

தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் அலுவலகம் திறப்பு விழா நடந்தது.

இந்த அலுவலகத்தை நாகை எம்.எல்.ஏ. தமிமூன் அன்சாரி திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தற்போது தமிழகத்தை பெரும் அபாயம் சூழ்ந்துள்ளது. வட இந்தியாவை போல பதட்டம் நிறைந்த பகுதியாக மாற்ற பா.ஜனதா மாற்ற துடிக்கிறது.

இன்றைய நிலையில் திராவிட கட்சிகள் பாதுகாக்கப்பட வேண்டும். திராவிட கட்சிகள் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் சூழ்நிலையின் அவசியம் கருதி இன்னும் 15 ஆண்டுகளுக்கு அ.தி.மு.க.- தி.மு.க. கட்சிகள் தான் தமிழகத்தை ஆள வேண்டும்.

அ.தி.மு.க.வை சீரழிப்பதில் பா.ஜனதாவுக்கு பெரும் பங்கு உண்டு. அ.தி.மு.க.வுக்கு சரியான தலைமை இல்லாததால் வரலாற்றில் இல்லாத அளவுக்கு 1800 அதிகாரிகளை வைத்து தினகரன் குடும்பத்தினரிடம் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.