செய்திகள்

ஒடிசாவில் தீயணைப்பு படையினரின் வேலைநிறுத்தம் மூன்றாம் நாளை எட்டியது

காவல் துறையினருக்கு இணையான சம்பளம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒடிசா மாநிலத்தில் தீயணைப்பு படையினரின் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று மூன்றாம் நாளை எட்டியது. #Firemenstrike #OdishaFiremenstrike

ஒடிசா மாநிலத்தில் போலீசாருக்கு இணையான சம்பளம், ஏழாவது சம்பளக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்துதல், ஒப்பந்த பணியாளர்கள் சுமார் ஆயிரம் பேருக்கு பணி நிரந்தரம், ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அம்மாநிலத்தில் உள்ள 341 தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த சுமார் 5 ஆயிரம் பணியாளர்கள் கடந்த 24-ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.