தீ விபத்து 
செய்திகள்

லைபீரியா - பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 28 மாணவர்கள் பலி

லைபீரியா நாட்டில் உள்ள பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 28 மாணவர்கள் உள்பட 30 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.

மொன்ரோவியா:

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லைபீரியாவின் தலைநகர் மொன்ரோவியா. இங்குள்ள பள்ளியில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் சிக்கி 28 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் உள்பட 30 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.  

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். 

பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி மாணவர்கள் பலியானதை அறிந்த அந்நாட்டு அதிபர் ஜார்ஜ் வே தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT