செய்திகள்

கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீர் தீ விபத்து

கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். #FireAtHospital #KoltataMedicalCollege

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்குள்ள மருந்து பிரிவில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி ஏராளமான பொருட்கள் கருகியதால், புகை மண்டலமாக காட்சியளித்தது.

இதுபற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 10 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஏராளமான போலீசாரும் மருத்துவமனைக்கு விரைந்தனர்.

SCROLL FOR NEXT