வடசென்னை அனல் மின்நிலையம் 
செய்திகள்

வடசென்னை அனல் மின்நிலையத்தில் தீ விபத்து

வடசென்னை அனல் மின்நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, 3 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை: 

திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வடசென்னை அனல் மின்நிலையத்தின் முதலாவது பிரிவில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. துறைமுகத்தில் இருந்து நிலக்கரி எடுத்துச் செல்லும் கன்வேயர் பெல்ட்டில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் 3 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

SCROLL FOR NEXT