செய்திகள்

உ.பி: கோரக்பூர் மருத்துவமனையில் தீ விபத்து: முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்

உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் உள்ள பி.ஆர்.டி மருத்துவமனையில் இன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் முதல்வர் அறை மற்றும் ஆவணங்கள் அறையில் உள்ள முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

மாலை மலர்

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் உள்ள பி.ஆர்.டி மருத்துவமனை வளாகத்தில் உள்ள மருத்துவகல்லூரி முதல்வர் அறை மற்றும் ஆவண காப்பக அறையில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு குழுவினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தீவிபத்தால் முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக இதே மருத்துவமனையில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியானது குறிப்பிடத்தக்கது.

தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.