செய்திகள்

மும்பை ராணுவ அலுவலகத்தில் திடீர் தீ விபத்து

தெற்கு மும்பையின் கொலாபா பகுதியில் அமைந்துள்ள ராணுவ அலுவலகத்தில் இன்றிரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #fire #armybuilding #southMumbai

மாலை மலர்

மும்பை:

தெற்கு மும்பையின் கொலாபா பகுதியில் ராணுவ அலுவலகங்கள் அமைந்துள்ள நான்கு மாடி கட்டிடத்தில் இன்றிரவு சுமார் 7 மணியளவில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

இதுதொடர்பான தகவல் அறிந்து 4 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்துவந்த மீட்புப் படையினர் தீயை அணைக்க போராடி வருகின்றனர். #tamilnews #fire #armybuilding #southMumbai