செய்திகள்

கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் மின்உற்பத்தி நிலையத்தில் தீ விபத்து: 5 பேர் கருகினர்

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில் பேட்டை தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உடல் கருகினர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில் பேட்டையில் தனியார் மின் உற்பத்தி நிலையம் உள்ளது. சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

இன்று காலை அங்கிருந்த வால்வில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. இதில் அருகில் நின்ற வடமாநில தொழிலாளர்கள் பலராம், சுபம், பியூவாஸ், சுந்தர்சிங் உள்பட 5 பேர் உடல் கருகினர்.

அவர்களை மற்ற ஊழியர்கள் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒருவர் மேல் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #tamilnews