செய்திகள்

திரிணாமுல் காங். குழு தடுக்கப்பட்டதற்கு அசாம் முதல்-மந்திரி மீது மம்தா அரசு வழக்கு

அசாம் சென்றிருந்த திரிணாமுல் காங்கிரஸ் குழு மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக அம்மாநில முதல்-மந்திரி மீது மம்தா பானர்ஜி அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது. #AssamNRC

மாலை மலர்

கொல்கத்தா:

அசாம் மாநிலத்தில் தேசிய குடியுரிமை பட்டியலில் இருந்து 40 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். அது குறித்து விசாரணை நடத்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 8 பேர் கொண்ட குழுவினர் மேற்கு வங்காளத்தில் இருந்து அசாம் சென்றனர்.

அதற்கு பதிலடியாக மேற்கு வங்காள மாநிலத்தில் அசாம் மாநில முதல்- மந்திரி சர்பானந்தா சோனோவால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் குழுவில் இடம் பெற்றிருந்த 2 பெண் எம்.பி.க்கள், ஒரு பெண் எம்.எல்.ஏ. உள்ளிட்டவர்களை தாக்குதல் நடத்த உத்தரவிட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அலிப்பூர் போலீஸ் நிலையத்தில் திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், கரிம்பூர் எம்.எல்.ஏ.வுமான மகுயா மொய்த்ரா சார்பிலும், எம்.பி.க்கள் ககோலி சோஸ் தஸ்திதார் மற்றும் மம்தா தாகூர் சார்பில் சுபாங் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலைய போலீசிலும் புகார் செய்யப்பட்டுள்ளன. அதில் அசாம் முதல்-மந்திரி சர்பானந்தா சோனோவால் உத்தரவின் பேரில் பெண் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ. மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டுள்ளது.