செய்திகள்

பாராளுமன்றத்தில் ஜி.எஸ்.டி. அறிமுக கூட்டம் துவங்கியது: மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி உரை

பாராளுமன்றத்தில் ஜி.எஸ்.டி அறிமுக கூட்டம் தேசிய கீதத்துடன் துவங்கியது. அறிமுக விழாவில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிமுக உரையாற்றினார்.

மாலை மலர்

புதுடெல்லி:

பாராளுமன்றத்தில் ஜி.எஸ்.டி. அறிமுக நிகழ்ச்சி துவங்கியது. இவ்விழாவில் குடியரசு தலைவர் பிரனாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணை தலைவர் ஹமீது அன்சாரி, சபாயாநகர் சுமித்ரா மகாஜன், பா.ஜ.க தலைவர் அமித் ஷா, முன்னாள் பிரதமர் தேவ கவுடா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும் மத்திய மந்திரிகள், மாநில முதல் மந்திரிகள், நிதி மந்திரள் மற்றும் எம்.பி.க்கள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

ஜி.எஸ்.டி அறிமுக நிகழ்ச்சியில் நிதி மந்திரி உரையில் கூறியதாவது.

தேசிய கீதம் இசைக்கப்பட்டு துவங்கிய விழாவில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிமுக உரையாற்றினார்.  நள்ளிரவில் மாபெரும் வரி சீர்த்திருத்தம் அமலுக்கு வருகிறது. ஒரே இந்தியா, ஒரே வரி நடைமுறைக்கு தேசம் மாறுகிறது. ஜி.எஸ்.டி. மூலம் மறைமுக வரி விதிப்பு முறை முடிவுக்கு வரும். ஜி.எஸ்.டி உருவானதில் அனைத்து மாநிலங்களின் பங்களிப்பும் உள்ளன. 

ஜி.எஸ்.டிபயணம் நீண்ட நெடு காலத்திற்கு முன் துவங்கியது. மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட ஜி.எஸ்.டி வரி விதிப்பு உதவும், ஜி.எஸ்.டி முறை அமலாவது ஒட்டும மொத்த இந்தியாவின் முக்கிய சாதனை ஆகும். சிறப்புக்குரிய வரித்திட்டம் செயலுக்கு வர பாடுபட்ட அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.