கோப்புபடம் 
செய்திகள்

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்று இறுதிகட்ட கவுன்சிலிங்

இணையதளத்தில், விருப்பமான தொழிற்பயிற்சி நிலையம், தொழிற்பிரிவைநேற்றே தேர்வு செய்திருக்க வேண்டும்.

மாலை மலர்

திருப்பூர்:

திருப்பூர், தாராபுரம், உடுமலையில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில்(ஐ.டி.ஐ.,) பல்வேறு படிப்புகளில் இணைய கடந்த மாதம் மாணவர் சேர்க்கை நடந்தது. 800க்கும் அதிகமானோர் இணையதளம் மூலம், நேரிலும் விண்ணப்பித்தனர்.கடந்த, 7, 8-ந்தேதிகளில், கவுன்சிலிங் நடந்தது. 550 பேர் படிப்பை தேர்வு செய்துள்ளனர்.

இந்தநிலையில் இன்று 9-ந்தேதி இறுதி கட்ட கவுன்சிலிங் நடக்கிறது. இதுவரை இணையாதவர் தங்களுக்கான படிப்பை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில், விருப்பமான தொழிற்பயிற்சி நிலையம், தொழிற்பிரிவை நேற்றே தேர்வு செய்திருக்க வேண்டும் என, திருப்பூர் ஐ.டி.ஐ., முதல்வர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.