பாரிஸ்:
பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டியில் 16-ம் நிலை வீரரான அமெரிக்காவின் ஜாக் சாக், பிரான்சின் ஜூலியன் பென்னெட்யூவை எதிர்கொண்டார். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய சாக் 7-5, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு அரைறுதி போட்டியில் 9-ம் நிலை வீரரான அமெரிக்காவின் ஜான் இஸ்னர், செர்பியாவின் பிலிப் கிரஜினோவிக்கை எதிர்த்து விளையாடினார். இப்போட்டியில், கிரஜினோவிக் 6-4, 6-7, 7-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இன்று நடைபெறும் இறுதி போட்டிகளில் ஜாக் சாக், பிலிப் கிரஜினோவிக்கை எதிர்த்து விளையாட உள்ளார்.