செய்திகள்

உலகக்கோப்பை குவாலிபையர்: அர்ஜென்டினா அணியில் இருந்து ஹிகுவைன் நீக்கம்

உலகக் கோப்பையில் பங்கேற்பதை உறுதி செய்வதற்கு அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், தகுதிச்சுற்றுக்கான அர்ஜென்டினா அணியில் இருந்து ஹிகுவைன் நீக்கப்பட்டுள்ளார்.

மாலை மலர்

அடுத்த வருடம் ரஷியாவில் உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதற்கான தகுதிச் சுற்றில் தென்அமெரிக்க பிரிவில் அர்ஜென்டினா ஐந்தாவது இடத்தில் உள்ளது.

இன்னும் பெரு மற்றும் ஈக்வடார் ஆகிய நாடுகளுக்கு இடையே அர்ஜென்டினா மோத உள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால்தான் அர்ஜென்டினா உலகக்கோப்பை தொடருக்கான இடத்தை உறுதி செய்யும்.

அக்டோபர் ஐந்தாம் தேதி பெரு அணியை தனது சொந்த ஊரில் சந்திக்கும் அர்ஜென்டினா, ஈக்வடாரை ஐந்து நாட்கள் கழித்து, அதன் சொந்த மண்ணில் சந்திக்கிறது.