செய்திகள்

பணி முடிந்து நடந்து சென்ற போது மயங்கி விழுந்து போலீஸ்காரர் பலி

கோவையில் பணி முடிந்து நடந்து சென்ற போது போக்குவரத்து போலீஸ்காரர் மயங்கி விழுந்து இறந்தார்.

கோவை:

கோவை பாப்பநாயக்கன் பாளையம் லட்சுமி மில் காலனியை சேர்ந்தவர் குமரேசன் (52). இவர் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில போக்குவரத்து பிரிவில் ஏட்டாக வேலை பார்த்து வந்தார். நேற்று மதியம் இவர் எல்.ஐ.சி. சிக்னலில் பணியில் இருந்தார். பணி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றார். நேதாஜி சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென அவர் மயங்கி விழுந்தார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் குமரேசனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

கடந்த 4 மாதத்திற்கு முன் குமரேசனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதற்கு சிகிச்சை பெற்று உள்ளார்.

தற்போது அவர் மாரடைப்பால் இறந்து இருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.