செய்திகள்

ஜெயலலிதா இல்லாதது சோகமாக உள்ளது: துரைமுருகன் பேச்சு

தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா இல்லாமல் இருப்பது சோகமாக உள்ளது என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

மாலை மலர்

வேலூரில் திமுக சார்பில் கருணாநிதி பிறந்த நாள் மற்றும் சட்டப்பேரவை வைர விழா நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன், தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா இல்லாமல் இருப்பது சோகமாக உள்ளது என்று கூறினார்

மேலும், ”கருணாநிதி நலமுடன் உள்ளார். நாள்தோறும் பத்திரிகையை படிக்கவைத்து கேட்டுக்கொள்கிறார், யாரைப் பிடிக்கும் என்ற மருத்துவரின் கேள்விக்கு அண்ணாவை பிடிக்கும் எனக் கூறுகிறார்”