பெடரர், நடால் உள்பட டாப்-8 வீரர்கள் பங்கேற்கும் உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நேற்று (12-ம் தேதி) தொடங்கியது.
இன்று நடைபெற்ற லீக் போட்டியில் மூன்றாம் நிலை வீரரான அலெக்ஸாண்டர் ஸ்வரேவ், ஐந்தாம் நிலை வீரரான மரின் சிலிக்கை எதிர்கொண்டார். இப்போட்டியில் ஸ்வரெவ் 6-4, 3-6, 6-4 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு லீக் போட்டியில் நான்காம் நிலை வீரரான டொமினிக் தெய்ம், ஆறாம் நிலை வீரரான கிரிகொர் டிமித்ரோவை எதிர்கொண்டார். இப்போட்டியில், 6-3, 5-7, 7-5 என்ற செட்கணக்கில் டிமித்ரோ வெற்றி பெற்றார்.