மியாமி சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-ம் சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும், ஆஸ்திரேலியாவின் தனாசி கொக்கிநாகிசும் மோதினர்.
ரோஜர் பெடரர் முதல் செட்டை 3-6 என்ற கணக்கில் கைப்பற்றினார். அதன்பின், சுதாரித்துக் கொண்ட கொக்கிநாகிஸ் சிறப்பாக ஆடி 6 - 3 என்ற கணக்கில் இரண்டாவது செட்டை கைப்பற்றினார்.
ஆட்டத்தின் வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது சுற்றிலும் கொக்கிநாகிஸ் அபாரமாக ஆடினார். பெடரரின் ஆட்டத்துக்கு ஈடுகொடுத்து மூன்றாவது செட்டையும் 7-6 (4) என்ற கணக்கில் கைப்பற்றினார்.