பெய்ஜிங்:
சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இறுதி போட்டி இன்று நடைபெற்றது.
இந்த போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபேல் நடால் மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ரோஜர் பெடரர் ஆகியோர் மோதினர்.
இறுதி ஆட்டத்தின் முதலில் இருந்தே ரோஜர் பெடரர் ஆதிக்கம் செலுத்தி வந்தார். ரபேல் நடாலும் போராட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் சுற்றில் 6-4 என்ற கணக்கில் பெடரர் கைப்பற்றினார்.
இரண்டாவது சுற்றிலும் பெடரர் கையே ஓங்கியிருந்தது. இறுதியில் பெடரர் 6-3 என்ற கணக்கில் இரண்டாவது செட்டையும் கைப்பற்றினார். இந்த போட்டி 71 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
இதையடுத்து, ரோஜர் பெடரர் 6-4, 6-3 என்ற செட்டுகளில் ரபேல் நடாலை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஓபனில் இது இவரது இரண்டாவது பட்டமாகும்.
ஏற்கனவே ஆஸ்திரேலியன் ஓபன் மற்றும் மியாமி மாஸ்டர்ஸ் தொடரில் ரபேல் நடாலை பெடரர் வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.