பெடரர் - ஜோகோவிச் 
செய்திகள்

விம்பிள்டன் சாம்பியன் யார்? - பெடரர், ஜோகோவிச் நாளை பலப்பரீட்சை

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில், ரோஜர் பெடரர், நோவக் ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

மாலை மலர்

லண்டன்:

லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் ஸ்பெயினைச் சேர்ந்த பாடிஸ்ட்டா அகுட்டை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இதையடுத்து மற்றொரு அரையிறுதியில், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் ஆகியோர் மோதினர். விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 7-6 (3), 1-6, 6-3, 6-4 என்ற செட்கணக்கில் பெடரல் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இதன்மூலம் 12-வது முறையாக விம்பிள்டன் பைனலுக்கு பெடரர் முன்னேறியிருக்கிறார்.

சாம்பியன் கோப்பைக்கான இறுதிப் போட்டி நாளை நடைபெற உள்ளது. இதில், பெடரர்- ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

ரோஜர் பெடரர் 8 முறையும், ஜோகோவிச் நான்கு முறையும் விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டு ஜாம்பவான்களும் மோதுவதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.