செய்திகள்

போடி அருகே தந்தை-மகனை தாக்கிய வாலிபர் கைது

போடி அருகே முன்விரோத தகராறில் தந்தை, மகனை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மாலை மலர்

தேனி:

போடி அருகே சில்லமரத்துப்பட்டி எம்.ஜி.ஆர்.காலனியை சேர்ந்தவர் கணேசன் (வயது40). இவர் தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டு விஷேசத்திற்கு சென்றிருந்தார். அப்போது குமார்பொம்மு (39) என்ற வாலிபர் தகராறு செய்து கொண்டிருந்தார். இதனை கணேசன் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

சம்பவத்தன்று அவ்வழியே சென்ற கணேசனை, குமார்பொம்மு வழிமறித்து தகராறில் ஈடுபட்டார். மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கணேசனின் உடலை கீறினார்.

இதனை தடுக்க வந்த கணேசனின் தந்தை மல்லையனும் தாக்கப்பட்டார். 2 பேரும் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து குமார் பொம்முவை கைது செய்தனர்.