கோப்புபடம் 
செய்திகள்

கொண்டலாம்பட்டி அருகே தொழிலாளியை தாக்கிய தந்தை, மகன் கைது

கொண்டலாம்பட்டி அருகே தொழிலாளியை தாக்கியதாக தந்தை மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

கொண்டலாம்பட்டி:

கொண்டலாம்பட்டி அருகே உள்ள வேடுகாத்தான்பட்டியை சேர்ந்தவர் சேகர் (வயது 57). இவருடைய மோட்டார் சைக்கிளை அதே பகுதியை சேர்ந்த மோகன்ராஜ்(21) என்பவர் வாங்கிக்கொண்டு கடைக்கு சென்றார். 

அவர் மோட்டார் சைக்கிளை கீழே போட்டுள்ளார். இதனால் மோட்டார் சைக்கிள் சேதமடைந்தது. இதுபற்றி தெரியவந்ததும் சேகர் மற்றும் அவருடைய மகன் குமார்(26) ஆகியோர் மோகன்ராஜியிடம் தகராறு செய்ததுடன் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் புஷ்பராணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேகர், குமார் ஆகியோரை கைது செய்தனர்.