செய்திகள்

தெப்பக்குளம் பகுதியில் தந்தை இறந்த சோகத்தில் ஆசிரியர் தற்கொலை

தந்தை இறந்த சோகத்தில் ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதுரை:

மதுரை அனுப்பானடி சவுராஷ்டிரா டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் தயாளன். இவரது மகன் சிவகுருபாலன் (வயது 26). தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

கடந்த மே மாதம் 16-ந் தேதி தயாளன் திடீரென இறந்தார். இதனால் சிவகுருபாலன் மனவேதனை அடைந்தார். தந்தை இறந்த சோகத்தில் யாரிடமும் சரியாக பேசா மல் இருந்தார்.

இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த சிவகுருபாலன் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT