தஞ்சாவூர்:
தஞ்சை பனகல் கட்டிடம் அருகில் தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தனர்.
உண்ணாவிரத போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் தருமராஜ் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் பழனிவேல் சங்கரன், மாவட்ட செயலாளர் பாரதிதாசன், மாநில துணைச் செயலாளர் சாரதி, மாவட்ட பொருளாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில தலைவர் சேகர், மாநில துணைத் தலைவர் சுபாஷ்சந்திரபோஸ், மாவட்ட பொருளாளர் ராமலிங்கம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். உண்ணாவிரதப் போராட்டத்தின் போது மண்பாண்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மழைக்கால பராமரிப்பு உதவித்தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கவேண்டும்.
மண்பாண்டம் செய்ய தொழிற்கூடம் அமைக்க மானியம் வழங்க வேண்டும். அரசு நிலங்களில் இருந்து மண்பாண்டம் செய்ய தேவையான களிமண் எடுக்க சிறப்பு சலுகைக்கு அனுமதி அளிக்க வேண்டும்.
மண்பாண்ட தொழிலாளர் நலவாரியத்தில் தற்போது வரை பதிவு செய்துள்ள அனைவருக்கும் மழைக்கால நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.