செய்திகள்

நாடு கடத்தப்பட்ட தாவூத் கூட்டாளி பரூக் தக்லாவுக்கு போலீஸ் காவல் - தடா கோர்ட்

துபாயில் இருந்து நாடுகடத்தப்பட்ட தாவூத் இப்ராஹிம் கூட்டாளி பரூக் தக்லாவை வரும் 19-ம் தேதி வரை சிறையிலடைக்க மும்பை தடா கோர்ட் உத்தரவிட்டது. #FarooqTakla

மாலை மலர்

மும்பை:

மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பில் நூற்றுக்கணக்கானவர்கள் பலியானார்கள். இதில் தேடப்படும் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் தலைமறைவாக இருக்கிறார். குண்டு வெடிப்பில் தொடர்புடைய அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். 

தாவூத்தின் முக்கிய கூட்டாளியான பரூக்தக்லா துபாயில் பதுங்கியிருந்தார். இவருக்கு எதிராக இந்தியா ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்திருந்தது. 1995-ம் ஆண்டு இவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், துபாய் அரசு பரூக்தக்லாவை நாடு கடத்தியது.

டெல்லி வந்தடைந்த அவரை போலீசார் கைது செய்து மும்பைக்கு கொண்டு வந்தனர். அங்கு தடா (Terrorist and Disruptive Activities Act Court) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை வரும் 19-ம் தேதி வரை போலீஸ் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

25 ஆண்டுகளுக்கு பின்னர் பரூக்தக்லா பிடிபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #FarooqTakla