பால், காய்கறிகள், சாலை, மகாராஷ்டிரா விவசாயிகள், போராட்டம், முதல்-மந்திரி, தேவேந்திர பட்னாவிஸ், Milk Spilled, Veggies, Dumped, Maharashtra, Farmers, Indefinite Strike
==========
மும்பை:
மகாராஷ்டிராவில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாக உள்ளார். மகாராஷ்டிர மாநில விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், பயிர்களுக்கு சிறந்த கொள்முதல் விலை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து போராடி வந்தனர்.
இதனிடையே, தங்களது கோரிக்கைகள் தொடர்பாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுடன் கடந்த செவ்வாய்க்கிழமை விவசாயிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை.
பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தை அடுத்து, மகாராஷ்டிரா விவசாயிகள் காலவரையற்ற போராட்டத்தை நேற்று தொடங்கினர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பால், காய்கறிகளை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மாகராஷ்டிர மாநில விவசாயிகள் போராட்டம் இரண்டாவது நாளான இன்றும் தொடர்ந்து. பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் முதலியவற்றை சாலைகள் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். பதற்றம் காரணமாக நாசிக் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் மற்றும் 35 சங்கங்களைச் சேர்ந்த மகாராஷ்டிரா தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவும் ஆதரவு தெரிவித்து உள்ளது.
இதனிடையே, விவசாயிகளின் போராட்டத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்தவர்கள் புகுந்து வன்முறையில் ஈடுபட முயல்வதாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் குற்றம்சாட்டியுள்ளார்.