செய்திகள்

விளைபொருட்களுக்கு விலை இல்லை- கருணைக்கொலைக்கு அனுமதி கேட்கும் விவசாயிகள்

மகாராஷ்டிர மாநிலம் புல்தானா பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கருணைக் கொலைக்கு அனுமதி கோரி ஆளுநருக்கு கடிதம் எழுதியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாலை மலர்

விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத நிலை உள்ளது. இதனால் வங்கிகளில் வாங்கிய பயிர்க்கடனை செலுத்த முடியாமல் பலர் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவ்வப்போது அவர்களின் பயிர்க்கடனை அரசாங்கம் தள்ளுபடி செய்கிறது. ஆனாலும், விவசாயிகள் பிரச்சினைக்கு இது நிரந்தர தீர்வாக இருக்க முடியாது. விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் கூறியுள்ளார்.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தைச் சேர்ந்த 91 விவசாயிகள் கருணைக் கொலைக்கு அனுமதி கேட்டு மாநில ஆளுநருக்கு ஒரு அவசர கடிதம் எழுதி உள்ளனர்.