செய்திகள்

சர்வதேச அகிம்சை நாளில் விவசாயிகள் மீது தடியடியா? - ராகுல் ஆவேசம்

டெல்லிக்குள் நுழைய முயன்ற விவசாயிகள் மீது சர்வதேச அகிம்சை நாளான இன்று போலீசார் நடத்திய தடியடிக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். #Farmersrally #RahulGandhi

மாலை மலர்

உத்தரப்பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த சில நாட்களாக 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அனைத்து மாநிலங்களை சேர்ந்த விவசாய சங்கத்தினர் பல்லாயிரக்கணக்கானோர் 'கிசான் கிராந்தி' என்ற பெயரில் கடந்த 23-ம் தேதி பேரணியாக புறப்பட்டு தலைநகர் டெல்லி நோக்கி வந்தனர்.
 

இன்று இந்த பேரணி காசியாபாத் பகுதியை கடந்து உத்தரப்பிரதேசம்  - டெல்லி எல்லைப்பகுதியை வந்தடைந்தது.  டெல்லிக்குள் விவசாயிகள் நுழையாத வகையில் ராஜ்காட் செல்லும் பாதையில் அதிரப்படை போலீசார் தடுப்பு வேலி அமைத்திருந்தனர்.

இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ‘இரண்டாண்டு காந்தி ஜெயந்தி கொண்டாட்டத்தின் தொடக்கமாக சர்வதேச அகிம்சை தினமான இன்று  டெல்லிக்குள் அமைதியாக நுழைய முயன்ற விவசாயிகள் மீது இந்த பா.ஜ.க. அரசு காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தியுள்ளது.