கோப்புபடம் 
செய்திகள்

மேட்டூர் உபரி நீர் திட்டங்களை கைவிடக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் மேட்டூர் உபரி நீர் திட்டங்களை கைவிடக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாலை மலர்

திருவாரூர்:

திருவாரூர் புதிய ரெயில் நிலையம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மாசிலாமணி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ரெங்கராஜன் முன்னிலை வகித்தார். காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் வகையில் மேட்டூர் அணை உபரி நீர் திட்டங்களை உடனே கைவிட வேண்டும். 

கொரோனா நோய் தொற்றால் நெருக்கடி நிலையில் உணவு உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு நிபந்தை-னையின்றி புதிய பயிர் கடன் வழங்கிட வேண்டும். திருவாரூரில் நடந்த விவசாயிகள் சந்திப்பு கூட்டத்திற்கு அழைக்காத முதல்-அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.