புளியமரம் 
செய்திகள்

விவசாயிகள் மரம் வளர்ப்பை பெரும் தொழிலாக செய்ய வேண்டுகோள்

புளிய மரத்தில் இருந்து கிடைக்கும் கொட்டை, பிசின் கூட அமெரிக்காவில் அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

மாலை மலர்

திருப்பூர்:

விவசாயிகள் மரம் வளர்ப்பை பெரும் தொழிலாக செய்ய முன்வர வேண்டும் என மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி துறைத்தலைவர் பாலசுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து திருப்பூர் பள்ளிப்பாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

விவசாயிகள் பயிர் சாகுபடி செய்வதை போல் தேக்கு, செம்மரம், சந்தன மரங்களை வளர்க்கலாம். விற்பனையின் போது முறையான அனுமதி பெற்று விற்கலாம். வனத்துறை சட்டங்கள் வனத்துக்குள் உள்ள மரங்களை  வெட்டி விற்பனை செய்வதைத்தான் கட்டுப்படுத்தும்.

இந்தியாவில் 3 ஆயிரம் ஏக்கரில் செம்மரம் உள்ளன. உலக அளவில் 44 சதவீத தேக்கு மரங்கள் இந்தியாவில் உள்ளன. அரிய வகை மரங்கள் அதிகம் வளர்ந்திருந்தாலும் 100 சதவீத தேவைகளும், இறக்குமதியின் மூலம் நிறைவேற்றப்படுகிறது. மரங்களை சந்தைப்படுத்த வழிகாட்டுதல் இல்லை.

புளிய மரத்தில் இருந்து கிடைக்கும் கொட்டை, பிசின் கூட அமெரிக்காவில் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் மரம் வெளிநாடுகளில் மதிப்பு கூட்டு பொருளாக மாறி  மீண்டும் இங்கேயே இறக்குமதியாகிறது.

இந்த நிலை மாற வேண்டும். இந்தியாவில் மரம் வளர்ப்பு பெரும் தொழிலாக மாற வேண்டும். மரங்களை சந்தைப்படுத்த கூட்டு முயற்சி எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.