கைது 
செய்திகள்

விவசாயியிடம் பணம் திருடிய 2 பேர் கைது

விவசாயியிடம் பணம் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

நெல்லை:

நாங்குநேரி அருகே உள்ள ஏமன்குளத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 52). விவசாயியான இவர் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தனது ஊருக்கு செல்வதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் நைசாக முருகனின் மணிபர்சை திருடிக் கொண்டு தப்பி ஓடினர். அந்த மணிபர்சில் ரூ.500 இருந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த முருகன் மற்றும் அக்கம்பக்கத்தினர் அந்த 2 வாலிபர்களையும் விரட்டிச் சென்று மடக்கி பிடித்து, மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில், அவர்கள் மேலப்பாளையத்தை சேர்ந்த புகாரி மகன் சாகுல் ஹமீது பாதுஷா (20), பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகரை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் கோபால் சுரேஷ் (29) என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, பணத்துடன் மணிபர்சை முருகனிடம் திரும்ப ஒப்படைத்தனர்.