செய்திகள்

செஞ்சி அருகே இடி தாக்கி விவசாயி உடல் கருகி பலி

செஞ்சி அருகே பலத்த மழையின் போது இடி தாக்கியதில் விவசாயி உடல் கருகி இறந்தார்.

செஞ்சி:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள போத்துவாய் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது32). விவசாய வேலைபார்த்து வந்தார்.

நேற்று இரவு 11 மணிஅளவில் சண்முகம் நல்லான் பிள்ளை பெற்றா கிராமத்தில் உள்ள தனது மாமானார் வீட்டுக்கு சென்றார். நந்தன் கால்வாய் வழியாக அவர் நடந்து சென்றார்.

அப்போது செஞ்சி மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது சண்முகத்தின் மீது இடி தாக்கியது.

இதில் சண்முகம் அதே இடத்தில் உடல் கருகி இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் நல்லான்பிள்ளை பெற்றாள் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.