ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த குருகுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல் (வயது45). விவசாயியான இவர் நேற்று குருகுப்பட்டியில் இருந்து ஊத்தங்கரைக்கு தனது மொபட்டில் சென்றார். அப்போது அவர் கிருஷ்ணகிரி-பெங்களூரு மெயின்ரோட்டில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று வண்டி கட்டுபாட்டை இழந்து நிலைத்தடுமாறி ரோட்டோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த கதிர்வேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ஊத்தங்கரை போலீசார் அங்கு வந்து கதிர்வேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.