செய்திகள்

பு.புளியம்பட்டியில் குடும்ப தகராறில் வேன் டிரைவர் தற்கொலை

பு.புளியம்பட்டியில் குடும்ப தகராறில் வேன் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பு.புளியம்பட்டி:

புஞ்சைபுளியம்பட்டி, புதுக்காலணி, காந்தி நகரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 34). வேன் டிரைவர். இவரது மனைவி சசிகலா (30). இவர்களுக்கு விஷால் (11), சுதீஸ் (7) என் இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று சசிகலா வீட்டு செலவுக்காக கார்த்திக்கிடம் பணம் கேட்டார். இது தொடர்பாக கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கார்த்திக் வீட்டை விட்டு  கோபித்து கொண்டு வெளியே சென்று விட்டார். பின்னர் சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த கார்த்திக் வாந்தி எடுத்தார். இதுகுறித்து கேட்ட போது விஷம் குடித்துவிட்டேன் என்று கார்த்திக் கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சசிகலா தனது உறவினருடன் கார்த்திக்கை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கார்த்திக்கை கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.