செய்திகள்

நிலக்கோட்டை அருகே குடும்ப தகராறில் தீக்குளித்து இளம்பெண் பலி

நிலக்கோட்டை அருகே குடும்ப தகராறில் தீக்குளித்து இளம்பெண் பலியானார். காப்பாற்ற முயன்ற கணவர் கருகினார்.

மாலை மலர்

நிலக்கோட்டை:

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள தோப்புபட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி அம்சவள்ளி (வயது 35). இவர்களுக்கு கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால் சம்பவத்தன்று அம்சவள்ளி தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதைப்பார்த்ததும் அருகில் இருந்த அவரது கணவர் ஆறுமுகம் காப்பாற்ற ஓடினார். இதில் 2 பேரும் தியில் கருகினர்.

படுகாயமடைந்த அவர்கள் இருவரும் நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அம்ச வள்ளிக்கு தீக்காயம் அதிகமாக இருக்கவே அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஆறுமுகம் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து அம்ச வள்ளியின் தாய் மீனாட்சி கொடுத்த புகாரின் பேரில் நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கருப்ப சாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.