நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த போதுமலை ஜெ.ஜெ. காலனியை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 41), விவசாயி. இவரது மகள் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை பற்றி தகவல் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அண்ணாமலை ராசிபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தனது மகள் இன்னும் திரும்பிவராததாலும் போலீசார் கண்டுபிடித்து தராததாலும் அண்ணாமலை இன்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் அவலகத்திற்கு வந்தார்.
பின்னர் அவர் உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்த நல்லிபாளையம் போலீசார் அவரை மடக்கிடிப்பித்து கைது செய்து அழைத்து சென்றனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் சாரணை நடத்தி வருகின்றனர்.