நாகர்கோவில்
ஈத்தாமொழி வில்லி விளை பகுதியை சேர்ந்தவர் தங்கநாடார் (வயது 65) தொழிலாளி.
சம்பவத்தன்று காலையில் வேலைக்கு செல்வதற்காக ஆத்திக்கடை பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்து நின்றார். அந்த வழியாக நாகர்கோவிலில் இருந்து கேசவன்புத்தன் துறைக்கு செல்வதற்காக அரசு பஸ் ஒன்று வந்தது. பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆத்திக்கடை சந்திப்பில் பயணிகளை இறக்கி விட்டு விட்டு செல்ல முயன்றது.
அப்போது அங்கு நின்ற தங்கநாடார் ஓடிச்சென்று பஸ்சில் ஏறினார். அப்போது நிலைதடுமாறி தவறி கிழே விழுந்தார். இதில் பஸ்சின் சக்கரம் அவர் மீது ஏறியது. இதில் தங்கநாடாருக்கு படுகாயம் ஏற்பட்டது. அக்கம், பக்கத்தினர் மற்றும் பஸ்சில் இருந்த பயணிகள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று தங்கநாடார் பரிதாபமாக இறந்தார்.