செய்திகள்

பும்ப்ராவின் நோ-பாலால் 3 ரன்னில் இருந்து தப்பிய பகர் சமான் சதம் அடித்தார்

பும்ப்ராவின் நோ-பாலால் 3 ரன்னில் இருந்து தப்பிய பாகிஸ்தான் தொடக்க வீரர் பகர் சமான் ஒருநாள் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

4-வது ஓவரை பும்ப்ரா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட பகர் சமான் விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஆனால், நடுவர் அவுட் கொடுக்காமல் பும்ப்ராவின் கால் க்ரீஸை தாண்டி சென்றதாக சந்தேகம் இருக்கிறது என ரீப்ளே கேட்டார்.

இதில் பும்ப்ராவின் கால் க்ரீஸிற்கு வெளியே சென்றது தெள்ளத்தெளிவாக சென்றது. இதனால் நோ-பால் என்று அறிவிக்கப்பட்டது, இதனால் பகர் சமான் 8 பந்தில் 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டாவதில் இருந்து தப்பினார். அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.


சதம் அடித்த பகர் சமான்

60 பந்தில் 7 பவுண்டரியுடன் 50 ரன்கள் எடுத்த பகர் சமான், 92 பந்தில் 12 பவுண்டரி, 2 சிக்சருடன் சதம் அடித்தார். இது அவரின் முதல் சர்வதேச சதமாகும். தொடர்ந்து விளையாடிய அவர், 114 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

SCROLL FOR NEXT