திண்டுக்கல்:
திண்டுக்கல் என்.எஸ்.நகர் பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜ். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் ஒரு புகார் மனு அளித்துள்ளார் அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:-
எனது மகள் குரூப்-2 தேர்வு எழுதி உள்ளார். எனது மகளுடன் படித்த சாணார்பட்டியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தனக்கு அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை பலரை தெரியும் என்றும் தான் அரசு அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளர் உள்பட பல வேலைகளை வாங்கிக் கொடுத்துள்ளதாகவும் கூறினார். அதனை நம்பி நான் அவரிடம் ரூ.7½ லட்சம் கொடுத்தேன். ஆனால் சொன்னபடி அவர் வேலை வாங்கித் தரவில்லை.
பின்னர் விசாரித்ததில் அவர் போலியாக வருவாய் ஆய்வாளர் என சொல்லிக் கொண்டு பலரிடம் பணம் மோசடி செய்தது தெரிய வந்தது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து தான் கொடுத்த பணத்தை வாங்கித் தர வேணடும் என கூறியிருந்தார்.
இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க எஸ்.பி.சக்திவேல் உத்தரவிட்டார். அதன் பேரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து போலி ஆசாமியை தேடி வருகின்றனர்.